வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 03 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அசிட் வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார்
தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பெண் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை
முறித்துக் கொண்டார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக