யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.
இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.¨
மேலும், கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர்.
தனிமையில் வசித்து வந்த இவர், இன்று காலை 6 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கு இடையே உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.
இரண்டாம் பாதிப்பு இது தொடர்பான செய்திகள்>>>>>>
யாழ்ப்பாணம் - கோப்பாயில் ஆண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் 16-05-2023.மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் உள்ள வீடொன்றின் அறையில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 65 வயதுடைய கார்த்திகேசு திருப்பதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக