பரிசில் புறநகரில் பெய்துவரும் தொடர் மழையினால் A86 நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் ஆரம்பித்த இந்த வெள்ளம், La Courneuve மற்றும் Nanterre பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இன்று இரவு மற்றும் நாளை புதன்கிழமை நண்பகல் வரை இந்த மழை நீடிக்கும் அபாயம் உள்ளதால் போக்குவரத்து தொடர்ந்து தடைப்படும் என வீதி அவதானிப்பாளர்களான Sytadin நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று காலை 630 கி. மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் பதிவாகியிருந்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் 227 கி. மீ தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவாகியிருந்தது.. என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக