யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் 01-05-2023.அன்று மாலை காருடன் , மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பெண்கள பரிதபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்கள் மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (26), மானிப்பாயை சேர்ந்த கீதரட்ணம் திவ்யா (31) ஆகியோரே
உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம், ஊர்கவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அண்மையாக உள்ள வளைவில் 01-05-2023.அன்று மாலை 4 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
இருவர் பலி நால்வர் படுகாயம்
ஊர்காவற்றுறையிலிருந்து வந்த கார், வீதியின் மத்திய வெள்ளைக் கோட்டை கடந்து எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை
மோதித்தள்ளியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் இருவரும் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் தடம்புரண்டதில், காரில் பயணித்த வடமராட்சி, பருத்தித்துறையை சேர்ந்த சிவசுப்ரமணியம் சுதாகரன், கருணாமூர்த்தி விமலாதேவி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் அண்மைகாலமாக விபத்துக்களின் உயிரிழப்போர் அதிகரித்து வரும் நிலையில், வாகனோட்டிகள், தமது வேகம் தொடர்பில் அவதானம் செலுத்துவது அவரது உயிரை மட்டுமன்றி பிற உயிர்களையும் காப்பாற்றும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக