தோற்றம் 28-01-191937. மறைவு -04-05-2023-
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.தம்பு பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.01.06.2023.வியாழக்கிழமை கிரீமலை தித்தக்கரையிலும்
ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 03-06-2023, அன்று சனிக்கிழமை பிற்பகல்,12,மணி அளவில் அன்னாரின் நவற்கிரியிலுள்ள இல்லத்தில் ஆத்மா சாந்திப்பிரத்தனையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும்
மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இங்கனம் -குடும்பத்தினர்
அன்னார் காலஞ் சென்றவர்களான,தம்பு .மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்
கமலி. சேகர் சாந்தி .நந்தா .காலம்சென்ற சத்தியன் மற்றும் மாலாஆகியோரின் அன்புத்தந்தையாரும் காலஞ் சென்ற துரைராஜா .செல்வராஜா ஜெயரத்தினம் .சின்னமணி ..ஞானமணி,வித்திலசிலோன்மணி மற்றும்
சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவர்
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே ஐயா !
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அப்பா !
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அப்பா! உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி அம்மா .பிள்ளைகள்,சகோதரர்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும்,
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
>>>>>
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தகவல்-
குடும்பத்தினர்
வீட்டுமுகவரி
நவற்கிரி புத்தூர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக