siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 2 மே, 2023

இலங்கை மாணவர் பெலராசில் சடலமாக மீட்ப்பு கொலையா தற்கொலையா விசாரணைகள் ஆரம்பம்

பெலராசில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பெலராசில் கடந்த சனிக்கிழமை மாணவர் அறையொன்றில் இருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அப் பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்பதாகவும் 24 வயதான இவர் அவ் வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவனாக தெரிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவன் தொடர்பில் தெரிய வந்தவை
கண்டி பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வி பயின்றுள்ளார்.
மாணவனின் தாயார் கடந்த சனிக்கிழமை தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மாணவனின் தாயார் தனது மகனின் மருத்துவ நண்பர்கள் பலரை அழைத்து தனது மகனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால் அவரை தொடர்புக்கொள்ளுமாறு 
தெரிவித்துள்ளார்.
இதன்போது சக மருத்துவ மாணவர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது மாணவனின் கழுத்தில் கட்டு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறுமூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது.
இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் 
கூறப்படுகிறது.
 மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது இதுவரையில் தெரியவரவில்லை. இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர பொலிஸார் தீவிர விசாரணை
 நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக