siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 12 மே, 2023

துப்பாக்கிச்சூட்டில் ஜேர்மனி மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலை இருவர் பலி

ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் 
11-05-2023.அன்று  நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் 11-05-2023.அன்று காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. துப்பாகிச்சூடு நடத்திய 53 வயதான இச்சந்தேக நபரை, தொழற்சாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து, பொலிஸாரிடம் 
ஒப்படைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக