பண்டாரவளை தோவ ரஜ மகா விகாரையில் இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த நடனக் குழுவினரை
ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் காயமடைந்து பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் அ
னுமதிக்கப்பட்டுள்ளனர்.
14-05-2023. இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர்களில் 08 யுவதிகள்இ 02 இளைஞர்கள் மற்றும் ஒரு வயதானவரும் அடங்குகின்றனர்.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென்றாலும் கால்களிலும் தலையிலும் காயங்கள் இருப்பதாக பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டொக்டர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
வாகன சாரதி தூங்கியதால் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக