ஸ்பெயினில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்ட்ரீமதுரா என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ ஏற்பட்டது. தற்போது கடுமையான காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக வனத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதன் காரணமாக, கடல்சோ மற்றும் டெஸ்கார்கமரியா உள்ளிட்ட வனத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நபர்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும்,
பல சாலைகள் மூடப்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில்
விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த காட்டுத்தீயால் இதுவரை 8,500 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமானது,மேலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக