siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 மே, 2023

வவுனியாவில் மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வவுனியா, கூமாங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தினுள் விநியோகிப்பதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
 அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச விநியோகத்திற்காக வழங்கப்பட்ட அரிசி ஒரு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது. 
அங்கு தலா 10 கிலோ எடையுள்ள 486 மூடைகள் காணப்பட்டதாகவும், குறித்த 
அரிசி கையிருப்பில் புழுக்கள் இருந்ததால் அதனை பயன்படுத்த 
முடியாதவாறு காணப்பட்டதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள்
 தெரிவித்தனர்.
 அரசு செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பத்து கிலோ அரிசியை விநியோகிக்க கிராம உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும். அரிசி மாசடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாக அரிசியை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக