மூன்று (03) வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று மாதங்களில் ஏழாவது (07) தடவையாக நாய்கள் கடித்து பலத்த காயமடைந்து பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும், அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷ07-05-2023-
அன்று தெரிவித்தார்.
தந்தையின் பராமரிப்பில் பசறை நமுனுகுல கனவரெல்ல தோட்டத்தில் வசிக்கும் குறித்த சிறுமி இ தாயின் பராமரிப்பை இழந்த நிலையில் இந்த சோகமான சூழலை எதிர்கொண்டுள்ளார்.
தாய் தந்தையையும் பிள்ளையையும் விட்டு வெகு நாட்களுக்கு முன்னரே சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலில் கூலித்தொழிலாளியான தந்தை வேலைக்கு சென்றபின்னர் வீட்டில் தனிமையில் இருக்கும் சிறுமி,அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று அயல் குழந்தைகளுடன் விளையாடச் சென்று இந்த விபத்துகளை எதிர்கொண்டுள்ளார்.
குழந்தைக்கு சரியான பராமரிப்பு கிடைக்காததால் இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்த குழந்தைக்கும் சரியான கவனிப்பு மற்றும் சரியான
வழிகாட்டுதல் இல்லை.
சரியான ஊட்டச்சத்து இல்லை. மன நிலை என்னவென்று சொல்ல முடியாது. எதிர்பாராத விபத்துகள் ஏற்படலாம். பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். அவர்கள் பல்வேறு முறைகேடுகளுக்கு
ஆளாகலாம்.
ஒரு குழந்தை நாளைய குடிமகன். ஒரு நாகரீக சமூகம் என்ற வகையில் நாம் இதை ஆராய வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டொக்என்பது குறிப்பிடத்தக்கதுடர் பாலித ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக