டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்களும் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்ட நிலையில் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன.
டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என கடலோரப் படை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய
பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி ஆவார்.
வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக ஜூன் 18-ஆம் திகதி சென்ற 5 பேரும் இறந்தனர்.
அதேவேளை இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன. புதன்கிழமை கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கியின் உலோகச் சிதைவுகள் இறக்கப்பட்டன.
.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக