மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று
இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று பகல் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளையிலிருந்து செட்டிபாளையம் நோக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்
படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள்
தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக