siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 12 ஜூன், 2023

பொகவந்தலாவையில் 10 வயது மாணவனின் முடிவால் அதிர்ச்சியில் பெற்றோர்

 தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் பத்து வயதான மாணவன் ஒருவன், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள் சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மாணவனின் உடல், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதவான் ஸ்தல பரிசோதனைக்குப் பின்னர் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொகவந்தலாவை பொலிஸார் 
தெரிவித்தனர்.
எனினும் மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது..
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக