siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 9 ஜூன், 2023

சட்டவிரோத மணல் அகழ்வில் மாந்தை மேற்கு பகுதியில் ஈடுபட்டோர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் 
ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் மற்றும் மன்னார் மாவட்ட புவிச்சரிதவியல் சுரங்க பணியக அதிகாரிகள் பார்வைக்காக வந்த போது இச்சம்பவம் 
நடைப்பெற்றது.
இதன் போது தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது. 
குறித்த தேத்தாவடி பகுதியில் அனுமதிப்பத்திரம் உள்ள 
இடங்களில் மட்டும் அகழப்படும் மண் களஞ்சியப்படுத்தும் இடங்களில், சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணையும் சேர்ந்து களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யப் படுகின்றமை இதன் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 உழவு இயந்திரங்கள், 3 ஜே.சி.பி (J.C.P) இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக