கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது. ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே
கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக
முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல்
வெளியாகி உள்ளது.
7க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு
இடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் 6782 262 286 அறிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக