siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 17 ஜூன், 2023

இலங்கையில் புதிய மின்கட்டண திருத்தம் தொடர்பில் சிக்கல்


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத் திருத்தத்திற்கு, குறித்த காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், தற்போதைய மின்சாரக் கட்டணத்தை 
தொடர்ச்சியாக அமுல்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் பதவி இன்னும் வெற்றிடமாக இருப்பதால், மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுக்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த காலத்திற்குள் புதிய கட்டணங்கள் தொடர்பான 
யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கினால் மாத்திரம் ஜூலை முதலாம் திகதி முதல் அதனை
 நடைமுறைப்படுத்த முடியும் என மின்சார சபை தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக