siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 ஜூன், 2023

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் புலனாய்வாளர்களால் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 இந்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வின் வைஷ்ணவை மேற்கோள்காட்டி, விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்துள்ளதாக தொடர்புடைய தகவல்கள் 
தெரிவிக்கின்றன. 
 இது தொடர்பான விபத்துக்கு காரணமான தரப்பினர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மேலும் 
தெரிவித்துள்ளார். 
 இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்துக்கான காரணம், "ரயிலை இயக்குவதற்கு சமிக்ஞை செய்யும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு" என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. 
 கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளன. 
 மேலும், புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக