siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 3 மார்ச், 2017

இலங்கை வருகின்றது சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் அதிவேக கப்பல்!!

 !அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பலான ‘யு.எஸ்.என்.எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வருகைத்தருகின்றது.
சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி இந்தக் கப்பல் நேற்று புறப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் முதலாவது மனிதாபிமான மற்றும் அனர்த்த, நிவாரண முன்னாயத்த ஒத்திகையை மேற்கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் இந்த அதிவேக போக்குவரத்துக் கப்பல் ஹம்பாந்தோட்டை நோக்கி வருகின்றது.
அவுஸ்ரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200 இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் இந்த ஒத்திகையில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஒத்திகையில் யுஎஸ்என்எஸ் போல் ரிவர் உதவிக் கப்பலாகப் பங்கேற்கவுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனா குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க கடற்படைக் கப்பல் இங்கு ஒத்திகையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக