வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
முகநூலில் அறிமுகமான அக்கா மற்றும் தங்கையின் நிர்வாணப் படங்களை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி இரண்டு இளைஞர்கள் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்த நாள் பரிசாக தந்தை வழங்கிய நவீன தொலைபேசியில் முகநூலை பயன்படுத்திய போது முதல் பெண்ணுக்கு ஒரு இளைஞன் அறிமுகமாகியுள்ளார்.
இளைஞனின் கோரிக்கைக்கு அமைய பெண் தனது நிர்வாணப் புகைப்படத்தை வழங்கியுள்ளார். அதனை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாக கூறி அச்சுறுத்தி பணத்தையும் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து பெண்ணின் தங்கையுடன் உரையாடியுள்ள சந்தேக நபர் அக்காவின் புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாக கூறியுள்ளார்.
அக்காவை காப்பற்ற முன்வந்த தங்கையை கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இரு இளைஞர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக கூறிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக