ஆவணங்கள் எதுவுமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தி
பொலிஸாரின் சமிக்ஞையை மதிக்காத நபருக்கு 24 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து, சாவகச்சேரி நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய சாலைப் போக்குவரத்துப் பொலிஸார் அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியபோது நிறுத்தாமல் சென்றதால் துரத்திப் பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் சாரதி
அனுமதிப் பத்திரம் வாகன வரிப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம் ஆகியவை இல்லாத நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளார் என்பதனைக் கண்டறிந்தனர்.
குறித்த நபருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றுமுன்தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து வழக்கினை விசாரித்த நீதிவான் ஐந்து குற்றங்களுக்குமாக 24 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து, தீர்ப்பளித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக