யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் சாவகச்ரேி, சோலையம்மன் கோவிலடியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சோலையம்மன் கோவிலடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக