பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் மீது பொலிஸார் கடுமையாக தாக்குதல் நடத்தியதில் உடல் உபாதைக்குள் உள்ளான குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸாருக்கும் பிரஸ்தாப நபருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போதே குடும்பஸ்தர் தாக்குதலுக்குள்ளா கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் துன்னாலையைச் சேர்ந்த தம்பிராசா தங்கராஜா (வயது-39) என்ற குடும்பஸ்தரே தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை
பெற்று வருகின்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக