கண்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயத்திற்கு உள்ளான மூவரும் சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி பொதுமருத்துவமனையில் வைத்தியராக பணிபுரியும் ஒருவரின் காரே முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
விபத்தினை தொடர்ந்து, குறித்த காரை செலுத்தி வந்த வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட வைத்தியர் மதுபோதையில் இருந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக