siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜனவரி, 2018

நாட்டில் காலநிலையில் திடீர் மாற்றம்

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து  நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் அநேகமான பிரதேசங்களில்...

செவ்வாய், 30 ஜனவரி, 2018

தைப்பூசத் திருவிழாவைமுன்னிட்டு யாழ். மக்களுக்கு அறிவித்தல்!

யாழில் பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி போன்ற பாதைகளை பயன்படுத்தும் பயணிகள் நாளைய தினம் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா  இடம்பெறவுள்ள நிலையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வருவதாகதெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில்  மேற்குறிப்பிட்ட வீதிகளில்  நாளை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் திருமஞ்சம் வெளிவீதி உலா வரவுள்ளது.இதனால் குறித்த காலப்பகுதியில்...

திங்கள், 29 ஜனவரி, 2018

கல்லடிப் பிரதேசத்தில் அண்ணனும் தம்பியும் தற்கொலை

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்துள்ளனர். இதனை காத்தான்குடி பொலிஸார் உறுதி செய்துள்ளனர் மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார  சபைப் பொறியியலாளரான கணேஷமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான இலங்கை மின்சார சபை ஊழியரான கணேஷமூர்த்தி சாரோஜிதன்(வயது 21) இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் அண்ணன் இறந்த...

பொம்மைவெளியில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  யாழ். பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள்  இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.  யாழ். விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 ஆயிரம்...

சம்பள அதிகரிப்பு இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு

இலங்கையின் அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கு 22 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி  தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் கீழ் 2006ஆம் ஆண்டில் இருந்து 10 வருடங்களுக்குள் எவ்வித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தொழிலாளர்...

சனி, 27 ஜனவரி, 2018

மரண அறிவித்தல்.திரு. மகாலிங்கம் செல்வகுமார் -26.01.18

  மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018  திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்.நவற்கிரி.அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ். லவுசானை ( Lausanne ஐ) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட. திரு- மகாலிங்கம் செல்வகுமார் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நடராசா, அழகம்மா தம்பதிகளின்  அன்பு மருமகனும், சாந்தினி அவர்களின் அன்புக்...

யாழில் பசுக்கொலையாளி மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடி பகுதியில்  கர்ப்பப் பசுவினை இறைச்சிக்காக வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.காவல் துறையினர்  தெரிவித்தனர். குறித்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் பசுவை இரண்டு நாட்களாக காணாத நிலையில் அந்த தேடி வந்துள்ளார். இந்நிலையில் இறைச்சிக்காக பசுக்கள் மற்றும் காளைகளை வெட்டும் சிலரிடம் தகவல் பெற்றுக்கொண்டு பார ஊர்தி ஒன்றினை சந்தேகத்திற்கிடமான முறையில்  பின்தொடர்ந்துள்ளார். பாரஊர்தியை...

வெள்ளி, 26 ஜனவரி, 2018

பாரிய கொள்ளைக் கும்பல் தென்மராட்சியை அதிர வைத்தனர்

பதுங்கு குழி­யி­னுள் மறைந்­தி­ருந்த கொள்­ளைக் கும்­பல் ஒன்­றைத் தாம் இனம் கண்டு கைது செய்­தி­ருப்பதாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர் .சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் . மேலும் மூவர் தப்­பி­யோ­டி­விட்­ட­னர்.கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லி­ருந்து 3 வீடு­க­ளில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட ஒரு லட்­சத்து 40 ஆயி­ரம் ரூபா பணம் மற்­றும் இரண்­ட­ரைப் பவுண் நகை என்­பன மீட்­கப்­பட்­டன என்­றும்  பொலி­ஸார்...

வியாழன், 25 ஜனவரி, 2018

தும்பளையில் பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு

யாழ், பருத்தித்துறை தும்பளையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று தெரிவித்து தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம்  நடந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இருவர்  மோட்டார் சைக்கிளில் வந்தனர். தம்மை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சமுர்த்தி தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள வந்தோம் என்று கூறிய அவர்கள் பதிவு செய்வது போன்று பாசாங்கு செய்தனர்.  அதனை உண்மை என்று நம்பிய வீட்டுப் பெண் அவர்களின்...

புதன், 24 ஜனவரி, 2018

இளைஞர் யாழ். ஊரெழு பகுதியில் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.நோக்கி...

அமரர் .தம்பு. துரைராஜா 14ம் ஆண்டு நினைவஞ்சலி 23.01.18

மலர்வு .96.06.1926    உதிர்வு .23.01.2016          யாழ்  நவற்கிரி புத்தூர்ரை  பிறப்பிடமா​வும்   வசிப்பிடமா​கவும் மாகக்  கொண்ட  அமரர் திரு,தம்பு  துரைராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  பதின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 23..01.2018..இன்று  திங்கள்கிழமை  இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிசமே இதயம் தான்! அதில் எவர் குடியிருப்பார் என முடிவெடுக்கும்...

புதன், 17 ஜனவரி, 2018

பாடசாலை மாணவி ஓருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பகுதியிலுள்ள, உமாமில் வீதியைச் சேர்ந்த கந்தலிங்கம் ரேஸ்மியா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும், 15 வயதான குறித்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ...

செவ்வாய், 16 ஜனவரி, 2018

மீசாலையில் ரயில் மோதி இரு மாடுகள் பலி!! மாணவி படுகாயம்!

யாழ்  மீசாலை புத்தூர் சந்திக்கும் வீரசிங்கம் பாடசாலைக்கு முன்பாக சற்று முன்னர் யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருத்த புகையிரத்துடன், ரயில் பாதையில் புல் மேய்த்து  கொண்டிருந்த இரண்டு பசுமாடுகள் மோதுண்டு உயிரிழந்துள்ளன.புகையிரத்துடன் மோதிய வேகத்தில் பசு மாடு வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக  விழுந்ததில், கல்லூரி  முடிவடைந்து வீடு செல்வதற்காக காத்திருந்த மாணவியை முட்டி மோதியதில் மாணவி காயமடைந்துள்ளர்.காயமடைந்த...

வாள்வெட்டு யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் !

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோயில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக  தெரிவிப்பு  இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸார் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் தீப்பற்றியது

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் சாவகச்சேரி, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக புகையிரதம் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்தின் இயந்திர பகுதியில் தீ விபத்து  ஏற்பட்டுள்து. இதன் காரணமாக...

திங்கள், 15 ஜனவரி, 2018

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி 15.01.18

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016       நீங்காத நினைவு.இரண்டாம் ஆண்டு 15-01.2018  அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை  பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட  அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன் ...

வெள்ளி, 12 ஜனவரி, 2018

கொக்காவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள்

மாங்குளம் - கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் மாங்குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நால்வரே விபத்தில் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரான நவரத்தினம் அருண் கல்வியை நிறைவு செய்துவிட்டு, குடும்பச்சுமையை ஏற்று, சொந்தக்காலில் நிற்க விரும்பி வர்த்தகத்தில்...

மரண அறிவித்தல், அமரர் கந்தப்பிள்ளை வன்னியசிங்கம்

ஆண்டவன் அடியில் : 12,01,2018  யாழ்.  தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக  கொண்ட அமரர் கந்தப்பிள்ளை  வன்னியசிங்கம்  ( லொறி உரிமையாளர் )  அவர்கள் 12,01,2018  வெள்ளிக்கிழமை   அன்று  காலமானார்.அன்னார் திருமதி   துளசி அவர்களின் அன்பு கணவரும் ஆவார். அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி  கந்தப்பிள்ளை  தம்பதிகளின்  அன்பு   மகனும் ,  காலஞ்சென்ற...

புதன், 10 ஜனவரி, 2018

மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்களின் பெயர் விபரம்

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரங்கள்  வெளியாகி உள்ளன. குறித்த சம்பவத்தில், யாழ். அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது 36), யாழ்.மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது 19) யாழ். பருத்திதுறையை சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தைச்...

ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்   இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.¨  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

நடு வீதியில் சுன்னாகத்தில் தனித்து விடப்பட்ட முதியவர்

யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார்.  இந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் கவனிப்பார் யாருமின்றி நீண்டநேரமாக உறங்கியுள்ளார்.  இந்த மனதை உருக்கும் சம்பவம் இன்று திங்கட்கிழமை(08) பிற்பகல்சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகில் பதிவாகியுள்ளது. காங்கேசன்துறை...

மரண அறிவித்தல் திருமதி விநாசித்தம்பி ராஜேஸ்வரி.10.01.18.

 இறப்பு : 10 01  2018  யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி  விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்கள் 10-01-2018 புதன் கிழமை  அன்று   காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை  சின்னத்தங்கம்    தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு  விநாசித்தம்பி .   அவர்களின் அன்பு மனைவியும்  திருக்குமரன்.சுவிஸ் .  சங்கீதா. லண்டன் ...

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சிறுவன் ஆவரங்கால் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ் ,ஆவரங்கால் புத்தூர்  பகுதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது .ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச..டிசாந் (வயது-11) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டார்.அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறு ஒன்றிலேயே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வெள்ளி, 5 ஜனவரி, 2018

இரயில் விபத்தில் மீசாலையில் ரயிலில் குடும்பஸ்தர் பலி

மீசாலையில்  இடம்பெற்ற இரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயுகன் என்ற குடும்பஸ்தரே  பலியாகியவராவார்.  சமிக்கை இல்லாத கடவையினால் இவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே இவர் மீது ரயில் மோதியதாக தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு  வருகின்றார்கள். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...