யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடி பகுதியில் கர்ப்பப் பசுவினை இறைச்சிக்காக வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.காவல் துறையினர்
தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் பசுவை இரண்டு நாட்களாக காணாத நிலையில் அந்த தேடி வந்துள்ளார். இந்நிலையில் இறைச்சிக்காக பசுக்கள் மற்றும் காளைகளை வெட்டும் சிலரிடம் தகவல் பெற்றுக்கொண்டு பார ஊர்தி ஒன்றினை சந்தேகத்திற்கிடமான முறையில்
பின்தொடர்ந்துள்ளார்.
பாரஊர்தியை செலுத்திய சாரதியிடம் ஊர்தியின் கதவுகளை திறக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது மறுப்பு தெரிவித்த சாரதி குறித்த பெண்ணுடன் முரண்பட்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் ஒன்று கூடி பார ஊர்தியின் கதவைத் திறந்து பார்த்த போது பசுவொன்றின் தோற்பாகங்கள் மற்றும் இறைச்சிகள் என வெவ்வேறாக பிரித்து
வைக்கட்டிருந்தது.
இதன்போது தனது பசுவின் காதில் காணப்பட்ட இலக்கத் தகட்டினைக் கொண்டு தனது பசுவினை குறித்த பெண் உறுதி செய்தார். இந்நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக