யாழ், பருத்தித்துறை தும்பளையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று தெரிவித்து தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இருவர்
மோட்டார் சைக்கிளில் வந்தனர். தம்மை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சமுர்த்தி தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள வந்தோம் என்று கூறிய அவர்கள் பதிவு செய்வது போன்று பாசாங்கு செய்தனர்.
அதனை உண்மை என்று நம்பிய வீட்டுப் பெண் அவர்களின் பதிவில் கவனம் செலுத்திய சந்தர்ப்பத்தைப் பார்த்து அவரது கழுத்தில் இருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடினர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக