siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 டிசம்பர், 2019

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தர்கள்

நேற்றைய தினம்(.28.12,19) வெளியாகியுள்ள 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் கணிதம், உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.கணிதம்,  உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.உயிரியல் பிரிவில் கிருசிகன் ஜெயனாந்தராசா 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் 1ஆம் இடத்தினையும் தேசிய ரீதியில்...

வியாழன், 26 டிசம்பர், 2019

மரண அறிவித்தல் அமரர் ஆறுமுகம் முத்தம்மா (பெத்தாச்சி) -25,12.19

தோற்றம்--06.02.1923 (96 வயது)  மறைவு ,25.12-2019  யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                  அமரர் ஆறுமுகம் முத்தம்மா  (பெத்தாச்சி) அவர்கள் 25-04-2019 புதன் கிழமை அன்று காலமானார். அன்னார்,    காலஞ்சென்ற அமரர்  ஆறுமுகம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான மாரிமுத்து   தம்பதிகளின் புத்திரியும் ...

செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரணைமடுவின் 10 வான் கதவுகள் திறப்பு கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை

வட மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை  நிலவி வருகின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 18.12.19,ஆம் திகதி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டன.இந்த நிலையில், தற்போது பத்து வான்கதவுகள்  திறக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வசிப்போரை...

வெள்ளி, 20 டிசம்பர், 2019

மரண அறிவித்தல் அமரர் கேது சிகாமணி பாக்கியம் -18,12.19

 உதிர்வு -18,12.2019 யாழ் சுழிபுரத்தைப்  பிறப்பிடமாகவும்,சுதுமலைதெற்கு மானிப்பாயை  வசிப்பிடமாகக்கொண்ட அமரர்  கேது சிகாமணி பாக்கியம் அவர்கள் ,18,12.2019.புதன் கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்,காலஞ்சென்ற ராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற வெற்றிவேலு கேது சிகாமணி (கேதீஸ்வரம்)அவர்களின்  அன்பு மனைவியும் காலஞ்சென்ற வெற்றிவேலு செல்லாச்சி  தம்பதியினரின் மருமகளும்  நகுலேஸ்வரன் (கனடா...

வியாழன், 19 டிசம்பர், 2019

மயிலிட்டி கடலில் கடற்படையிடம் சிக்கிய பெரும் தொகையான கேரளக் கஞ்சா

யாழ் மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை இடையேயான கடற்பகுதியில் இன்றையதினம் பெருமளவு கேரள கஞ்சாப் பொதிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.முன்னதாக மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்புக்கிடையில் மூன்று பொதிகள் அடங்கிய கேரள கஞ்சாவை கடற்படை  கைப்பற்றியிருந்தது .இதனையடுத்து வல்வெட்டித்துறை கடற்பகுதியில் மிதந்து  சென்ற ஐந்து பார்சல்கள் அடங்கிய கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது. இவை ஒவ்வொன்றும் 70 கிலோ நிறையுடையவை என்றும்...

செவ்வாய், 17 டிசம்பர், 2019

கரிக்கட்டை பகுதியில் பவுஸர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிய கார்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கரிக்கட்டை பகுதியில் ​நேற்று (16.12.19) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுஸர் ஒன்றுடன், கார் ஒன்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல்  பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு மாலபே, தலவத்கொட பகுதியைச் சேர்ந்த நிசாந்த மன்சுல சில்வா (வயது 43) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டனர்.கொழும்பில் இருந்து பாலாவி சீமெந்து...

மரண அறிவித்தல் திரு குணராஜசிங்கம் சிவகஜன்.15,.12.19

மலர்வு  -10 09 1987- உதிர்வு -15 12. 2019 யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குணராஜசிங்கம் சிவகஜன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார்,திரு திருமதி  குணராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவகணேஸ், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், டமித்தா அவர்களின் அன்புக் கணவரும், சிந்துஜா(ஜேர்மனி), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவகரன், சுதாகரன்...

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

கோர விபத்து.சாவகச்சேரியில் காரை மோதித் தள்ளிய ரயில்

யாழ் சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயற்சித்த கார் மீது, ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பொறுப்பற்ற விதமாக ரயில் கடவையை கடக்க முயற்சித்த  நிலையில் கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில்  காரில்பயணித்த   இருவர் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர். இங்கு அழுத்தவும்...

வெள்ளி, 13 டிசம்பர், 2019

திருநாவற்குளத்தில் கார்.மோதி மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வீதியோரத்தில் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.குறித்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.வவுனியா, தாண்டிக்குளம் பகுதியிலிருந்து, காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கிச் சென்ற கார் திருநாவற்குளம் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.ஆலயத்துக்கு அருகிலிருந்த  மரக்கறிக்...

வியாபாரி மூலையில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று (12.121.19.) மாலை இந்த துயரச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவணான ஜெகன் ஆனந்த் (17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் பட்டம் ஏற்றச் சென்றிருந்த போதும் நீண்ட நேரமாகியும் காணவில்லை என பெற்றோர், உறவினர்களும், நண்பர்களும்...

தாயார் மீது மோதிய காரை ஆவேசத்துடன் தாக்கிய சிறுவன்

தனது தாய் மீது மோதிய காரை கடும் கோபத்துடன் தாக்கும் சிறுவனின் காணொளி  தீயாகப் பரவி வருகின்றது.குறித்த சம்பவத்தினை அருகில் இருந்து பார்த்தவர்கள் காணொளி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இது தற்போது  வைரலாகப் பரவி வருகின்றது. தாய் மீது அதிக பாசம் கொண்ட சிறுவனின் செயலும் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.இறுதியில் காரில் மோதிய நபரே அவர்களை அழைத்து சென்றுள்ளர். குறித்த  கார் ஓட்டுனரை சமூகவாசிகள்  திட்டி வருகின்றனர். சிறுவனும்,...

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புகளின் விலைகள் குறைப்பு

ஜனவரி 1ம் திகதி தொடக்கம், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி  டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக...

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

உருத்திரபுரம் பகுதியில் மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்குச் சொந்தமான  அரிசி ஆலைக்கு இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம்  பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் தாக்கத்திற்குள்ளான குறித்த...

சனி, 30 நவம்பர், 2019

மரண அறிவித்தல் திரு கந்தையா கதிரிப்பிள்ளை 30 11.19

பிறப்பு -23 .02.1931-  இறப்பு  -30 .11 2019  யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரிப்பிள்ளை அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி  அவர்களின் அன்புக் கணவரும்,  கஜமுகதேவி,...

செவ்வாய், 26 நவம்பர், 2019

பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக இந்த கப்பை பயன்படுத்திவிட்டு இனி சாப்பிடலாம்

இனி காபி குடித்துவிட்டு கோப்பையை சாப்பிட்டு விடலாம்.. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக  வருகின்றது புது கப்…..உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என  தமிழக அரசு உத்தரவிட்டு அதன்படி ஜனவரி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒருசில வாரங்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட இந்த உத்தரவு நாட்கள் செல்ல செல்ல மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது. இந்நிலையில்,...

பலத்த மழையினால் கிளிநொச்சியில்பெரு வெள்ளம் பொதுமக்கள் மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சியில் தொடரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளன.கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை உருத்திரபுரம் வீதியில் வெள்ளம் அதிகளவு பாய்கின்றது. இதனால் போக்குவரத்தும்  தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை...

திங்கள், 25 நவம்பர், 2019

நினைவஞ்சலி .2ம் ஆண்டு அமரர் இரத்தினராஜா தங்கம்மா .25.11.19

திதி -.25.11.201 யாழ்.தோப்பைப்பிறப்பிடமாகவும், சுவிஸ்  -கனடா - தோப் பு  அச்சுவேலியை  வசித்து வந்தஅமரர் இரத்தினராஜா தங்கம்மா  அவர்களின் 2ம் ஆண்டு  நினைவஞ்சலி.(திதி .25.11.2019. ,திங்கக்கிழமை   இன்று    அம்மா -அன்பின் உருவமாய் அரவணைப்பின் சிகரமாய் வாழ்ந்தவரே நீங்கள் எங்களை பிரிந்து ஆண்டு 0ஒன்று  சென்றாலும் உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும் எங்கள் மனதை விட்டு  அகலவில்லை காலங்கள்...

திருநீற்றுகேணியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள், சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள்  குளத்திற்குள் சேற்றிற்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.சுரேஷ்குமார் தர்சன் (20), யதுர்சன் (19), கே.திவாகரன் 19 ஆகியோரே உயிரிழந்தனர். இதில், தர்சன் கடந்த ஆறு மாதங்களின் முன்னரே திருமணம் முடித்திருந்தார் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அம்பந்தோட்டையில் மோதலை தடுத்த இளைஞன் பலி

அம்பந்தோட்டை – பதகிரிய பகுதியில் வீடொன்றின் 16.11.2019. சனிக்கிழமை இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். பதகிரிய பகுதி வீடொன்றின் நபர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதன்போது படுகாயமடைந்த இளைஞன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பதகிரிய பகுதியைச்...

புதன், 13 நவம்பர், 2019

ரயில் விபத்து.யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு மரணம்

யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில் புகையிரதக் கடவை ஊடாக, கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம்.13.11.2019.  இன்று முற்பகல் 9 மணியளவில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (31) என்று ஒரு பிள்ளையின்...

செவ்வாய், 12 நவம்பர், 2019

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (11.11.19.திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த  பெண்ணின் கணவர் நேற்று வெளி மாவட்டம் ஒன்றுக்கு...

முதலாவதாக யாழிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் பயணம் செய்த வடக்கு வி.ஐ.பி

யாழ் பலாலி  சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவதாக பயணிக்கும் விமானத்தில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனும் பயணம் மேற்கொண்டார்.அண்மையில் திறந்து  வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்றுதான் முதலாவது  பயணிகள் விமான சேவையை அலையன்ஸ் எயார் நிறுவனம் ஆரம்பித்தது.11.11.2019..இன்று காலை யாழிலிருந்து கிளம்பிய AL 9 102 விமானத்தில் பயணம் செய்தவர்களுடன், வடக்கு ஆளுனரும்...

திங்கள், 11 நவம்பர், 2019

கிளிநொச்சியில் பாம்புக் கடிக்கு இலக்காகி பாலகன் பரிதாபமாக மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (10.11.2019) இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு சென்று கட்டிலில்  உறங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர், வீட்டுக்குள் இருந்து வெளியேறிய கண்டங்கருவளை இனத்தைச்சேர்ந்த பாம்பு ஒன்றை தந்தை அடித்துக் கொன்றுள்ளார். இதன் பின்னர்...

கனகராயன்குளத்தில் யாழ் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் .10.11.2019.நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் 11.11.2019.இன்று முற்பகல் குறித்த மாணவன்  காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.(10.11.).நேற்று கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த  யாழ் பல்கலைக்கழக மாணவன் தடி...