கொரோனா தொற்றுக் காரணமாக எட்டு இலங்கையர் இந்தியாவில் மரணமடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இதில் ஆறு பேர் புதுடில்லியிலும்,இருவர் ராஜஸ்தானிலும் மரணமடைந்தனர்.இதே வேளையில்,புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஆறு பேருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தூதரகப் பணியாளர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், தூதரகமும் மூடப்பட்டிருக்கின்றது.இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக