siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 26 மே, 2021

உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த சிறுவன் தீடீர் காய்ச்சலால் மரணம்

 யாழ் நாவலடியைச் சேர்ந்த சிறுவன் தீடீர் காய்ச்சல் காரணமாக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த ப ஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடற் சோர்வு காணப்பட்டுள்ளது. அதனால் அவர் நேற்று இரவு 9.30 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எ
னினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சலே காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சிறுவனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக