கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் 04-05-2021.அன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு கடமை முடிந்து வீடு திரும்பிய பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் அதிகாலை தாயார் சென்று பார்வையிட்ட போதே தூக்கில் தொங்கிய நிலையில்
காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் மனைவியை பிரிந்து வயோதிப தாயாருடன் வசித்து
வந்துள்ளார். மேலும்
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக தற்கொலை செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக தற்கொலை செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >
0 கருத்துகள்:
கருத்துரையிடுக