முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்
நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர்
உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிசிஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பிசிஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானால் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தொற்று இனம் காணப்பட்டால் உரிய கொரோனா நடைமுறைக்கு அமைய தகனம் செய்யப்படும் என காவல் துறை தெரிவித்தனர்.
சுதந்திரபுரம் கொலனி பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக