siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 மே, 2021

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஜெர்மனியில் 88 ஆயிரத்தைக் கடந்தது


ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லடசத்தைக் கடந்துள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை 
ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது. அவர்களில் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
 உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 9-வது இடத்தில் உள்ளது
இந்நிலையில், ஜெர்மனியில் ஒரே நாளில் 5,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லட்சத்தைத் 
தாண்டியுள்ளது.
அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 039 ஆக அதிகரித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக