siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

இலங்கையில் 119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அவதியில் நோயாளர்கள்

இலங்கையில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
எனினும் நோயாளிகளுக்கு தேவையான 14 வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்
நேற்றைய தினம் (24-04-2023) சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த 14 வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன
இந்திய கடன் திட்டத்தில் 99% சதவீத மருந்துகளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, இலங்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கடன் திட்டத்தில் இருந்து 
பெறப்பட உள்ளன.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்கு
றையை மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது.இதேவேளை இந்தோனேசிய கடன் திட்டம் மூலமும் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து 
வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க
 மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக