இந்தியாவில் தனது திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார்
தேடி வருகின்றனர்.
திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 தடவைகள் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர் அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத் துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில்
பதிவாகியுள்ளது.
சலேம்பூர் எனும் கிராமத்தில்.07-04-2023. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலையில், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக