siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 6 ஏப்ரல், 2023

நாட்டில் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திரம் ஒன்று

களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர சம்பவம் ஒன்று 
இடம்பெற்றுள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது சகோதரர் இறந்து விட்டதாக மரண நிவாரண சங்கத்திடம் கூறி 26000 ரூபாவை பெண் ஒருவர் மோசடியாக பெற்றுள்ளார்.
புளத்சிங்கள, மொல்காவ, பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் கலவான பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரன் இறந்துவிட்டதாக ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளமை 
தெரியவந்துள்ளது
இதன்போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக கூறப்பட்டமையினால் மரண நிவாரண சங்கத்தினர் மரண சடங்குகளை செய்ய 
தயாராகியுள்ளனர்.
எனினும் மரண நிகழ்வு வேறு ஊரில் நடப்பதாக கூறி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மரண நிவாரண சங்க நிர்வாகிகள் இறந்தவரின் மரண சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறியபோது, ​​கிடைத்த தொகையில் பாதியை செலுத்தி சங்கத்தில் இருந்து விலகுவதாக அந்த 
பெண் தெரிவித்தார்.
உயிருடன் உள்ள ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறியதாக சங்கத்தின் பொருளாளர் புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, இது தொடர்பில் விசாரணைகள் 
மேற்கொள்ளப்பட்டன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக