siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 1 ஏப்ரல், 2023

சட்டவிரோதமாக கனடா எல்லை வழியாக நுழைய முயன்ற 7பேர் உயிரிழப்பு

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு
 வருகின்றனர். 
இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமானியா நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். 
கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். 
அப்போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். 
இந்த சம்பவத்தில் இந்திய குடும்பத்தினர் உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. 
அந்தக் குழந்தையை தேடும் பணிகள் தீவி
ரமாக நடைபெற்று வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக