siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 22 ஏப்ரல், 2023

நெடுந்தீவில் வெளிநாட்டிலிருந்து சென்றவர்கள் கொடூரமாக கொலை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நால்வர் வீடொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவமானது-22.04.2023 இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் 
தெரிவித்தார். 
இதன்போது இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் உட்பட ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
3 பெண்களும் 2 ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்தே வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.
நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் (ஒருவர் பாண்டியன்தாழ்வு), மற்றொருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் என ஐவரின் சடலங்களே மீட்கப்பட்டன.
மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டனர். ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டார்.
மற்றொருவர் அறை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நெடுத்தீவுக்குச்
 சென்றுள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக