siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 15 ஏப்ரல், 2023

நாட்டில் மகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

கொழும்பில் இரவு மழை பெய்தாலும் வெப்பம் 'எச்சரிக்கை' மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நாளை மனித 
உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானமான நிலை வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலில் 'எச்சரிக்கை' அளவில் இருக்கும் வெப்பநிலை சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
எனவே முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், முதியவர்கள்,நோயாளிகள், குழந்தைகளை வெளிப்புறங்களுக்கு
 செல்வதை மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் பொதுமக்கள் இலகுரக மற்றும் வெள்ளை 
அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக