siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மக்களை காவல் காக்க நியூயார்க்கில் களமிறங்கும் ரோபோ நாய்

நியூயார்க் பொலிஸார் ரோபோ நாய் ஒன்றை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு மாத்திரம் (2022) நியூயார்க் நகரில் 1 லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள அதேசமயம் 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.
நியூயார்க் நகரில் 36 ஆயிரம் பொலிஸார் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை நகர பொலிஸ் அதிகாரிகள் பின்பற்றி வருகின்றனர்.
ரோந்து பணியில் ரோபோ நாய் 
அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த ரோபோ நாய் ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது.
சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரோபோ நாய் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளது.
ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும் என 
கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியூயார்க் பொலிஸார் 
அறிமுகம் செய்துள்ளனர்.    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக