siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 27 ஏப்ரல், 2023

ஆய்வில் அதிர்ச்சி எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 
கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் 
செல்லவில்லை. 
இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி 
மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக