siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள குழந்தை இயேசு கோவில் - வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் .21-04-2023.இன்றைய தினம்.நண்பகல் குழந்தையேசு கோவில் பத்திமாதா சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
கோப்பாபிலவு பகுதியில் இருந்து வந்த கன்டர் வாகனம் வீதியை கடக்க முற்பட்ட உந்துருளியில் பயணித்தவரை மோதித்தள்ளியுள்ளது.
விபத்திற்குள்ளான உந்துருளி தீ பற்றி எரிந்துள்ளது. காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
விபத்திற்குக் காரணமான கன்டர் வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக