முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் குப்பி விளக்கு கவிழ்ந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 மாத குழந்தை எரிந்து ஆபத்தான நிலையில் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இரவு தேராவில் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது குப்பி விளக்கு தீப்பிடித்து எரிந்த நிலையில் சிசுவின் உடல் எரிந்து ஆபத்தான நிலையில் தருமபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டது.
சிசுவை மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குழந்தை
உயிரிழந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக