siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பருத்தித்துறையிலிருந்து 773 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மூளாய், பொன்னாலைக்கான 773 ஆம் பாதை இலக்க பஸ் சேவை கடந்த 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
தினமும் காலை 5.45 மணிக்கும் பிற்பகல் 2.15 மணிக்கும் பருத்தித்துறையிலிருந்தும் காலை 8 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் பொன்னாலையிலிருந்தும் இருசேவைகள் இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை இ.போ.ச. பணிமனை முகாமையாளர் 
கே.கந்தசாமி 
தெரிவித்தார். கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தினால் தடைப்பட்டிருந்த இச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து 30 ஆண்டு காலஇடைவெளிக்குப் பின்னர் இச் சேவை மீளவும்
 ஆரம்பிக்கப்பட்டுள்ளது
. இச்சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி பருத்தித்துறையிலிருந்து மந்திகை, நெல்லியடி, குஞ்சர் கடை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு, அச்சுவேலி, புத்தூர், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம், கீரிமலை, சேந்தாங்குளம், விளான், பண்டத்தரிப்பு, சித்தன்கேணி, சுழிபுரம், மூளாய் ஊடாக பொன்னாலை வரை இடம்பெற்றறு, 
வருகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 பிப்ரவரி, 2016

வீட்டை உடைத்து பெறுமதியான பணம், நகை கொள்ளை!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதன் வீதி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் உடைத்து வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 
வீட்டில் இருந்த 
5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விமானம் நடுவானில் கோளாறானது : விமானத்தின் போக்கில் சென்ற விமானி

பிரான்சில் சிறிய ரக விமானத்தில் பயணித்த போது, என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரோட்டில் தரையிரங்கியுள்ளது.
40 வயதுடைய விமானி ஒருவர், சிறிய ரக விமானம் ஒன்றினை, Seine-et-Marne என்ற பிரெஞ்சு துறையில் இருந்து எடுத்துக்கொண்டு 
சென்றுள்ளார்.
அப்போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு, தாறுமாறாக ஓடியுள்ளது.
விமானத்தின் போக்கில் சென்ற விமானியும் என்ன செய்வதென்று தெரியாமலிருக்கையில், Giremoutiers மற்றும் Mouroux இரண்டிற்குமிடையேயான ரோட்டில் தரையிரங்கியது.
ஆனால், தீவிர காயங்கள் எதுவும் ஏற்படாமல் விமானி உயிர்பிழைத்துள்ளார், புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 6 பிப்ரவரி, 2016

சிறுவர்க்கு பிச்சை எடுத்து உதவும் பெரியவர்!!!

பணம் இருந்தால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களை கடவுளுக்கு இணையானவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
குஜராத் மாநிலத்தின் மெக்னசா என்ற சிறு கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு செல்லும் கிம்ஜிபாய் என்ற முதியவர், அங்கு படித்துவரும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் பேனா, பென்சில்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பது வழக்கம்.
இந்த முறை அங்கன்வாடிக்கு சென்ற முதியவர், தங்கத்தோடு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார், அந்த தங்கத்தோட்டினை 10 குழந்தைகளுக்கு அன்போடு வழங்கியுள்ளார்.
இவர், அங்கு செல்வதற்கு முன்பாக 10 குழந்தைகளை தெரிவு செய்துவைக்குமாறு அங்கிருக்கும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார், அதன்படியே தெரிவு செய்யப்பட்டிருந்த அந்த குழந்தைகளுக்கு தங்கத்தோட்டினை வழங்கியுள்ளார்.
இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் செல்வந்தர் கிடையாது, பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தினை வைத்து கடந்த 13 ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இந்நபரின் உதவி மனப்பான்மையை புரிந்துகொண்டு, நகைக்கடைக்காரரும் ரூ.13 ஆயிரம் மதிக்கத்தக்க தங்கத்தோட்டின் விலையை 3 ஆயிரமாக குறைத்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை
 செய்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 3 பிப்ரவரி, 2016

தனியார் பேருந்து ஓட்டோவை மோதியதால் :மூவர் படுகாயம்!!!

யாழில் தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பயணித்த பாடசாலை மாணவன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி  பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக  எதிரே வந்த முச்சக்கர வண்டியை அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் என்.டி.பி வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஜேர்மனிக்கு போலிக்கடவுச் சீட்டில் செல்ல முயற்சித்தவர் கைது.

போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 31 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 25 ஜனவரி, 2016

தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்ட இளைஞர் விமான நிலையத்தில் கைது.

ஒமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் ஒமானில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரவினர் முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 22 ஜனவரி, 2016

கோடீஸ்வர தம்பதிகள் நடுவானில் விபத்தால் உடல் கருகி பலி ?

அமெரிக்கா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தம்பதி இருவர் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது நடுவானில் ஏற்பட்ட திடீர் விபத்தால் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டொனால்ட் பேகர் (59) என்பவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவர். இதே மாகாணத்தில் மட்டும் இவருக்கு 2.5 மில்லியன் சதுர பரபரப்பளவில் சொத்துக்கள் 
உள்ளன.
டொனால்ட் கடந்த 2012ம் ஆண்டு ஆபரண நகை தயாரிப்பாளரான டான் ஹண்டர் (55) என்பவரை திருமணம் 
செய்துக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று உட்டாஹ் மாகாணத்தில் ஒரு அலுவலக வேலையை முடித்துக்கொண்டு இருவரும் சிறிய ரக விமானத்தில் அரிசோனா திரும்பியுள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விமானத்தில் இருந்த இரண்டு என்ஜின்களில் ஒன்றில் இருந்து திடீரென நெருப்பு வெளியாகியுள்ளது.
இதனைக்கண்ட டொனால்ட் உடனடியாக விமானத்தை உட்டாஹ் நகருக்கு திருப்பியுள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக விமான என்ஜின் வெடித்ததில் விமானம் தீப்பற்றி எரிந்தவாறு Cedar Fort என்ற பகுதியில் 
விழுந்துள்ளது.
சம்பவம் அறிந்து வந்த மீட்பு படையினர், உயிரிழந்தது டொனால்ட் மற்றும் அவரது மனைவி தான் என 
உறுதிப்படுத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 21 ஜனவரி, 2016

வீட்டு வேலை செய்து வந்த பெண்ணின் கை துண்டிக்கப்பட்டுள்ளது !

.சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து உரிய இழப்பீடினை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான கஸ்துரி சவுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவரை அந்த வீட்டின் உரிமையாளர் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் இவரை தடுத்து நிறுத்தும் நோக்கில் தாக்கியதில் இவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுதியில் வசித்த இந்தியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாநில அரசின் உதவியுடன் அவர் நாடு திரும்பினார்.
இதனிடையே கஸ்தூரி மற்றும் அவரது மகன் மோகனுடன் வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தவர்கள்,
சவுதியில் நடந்து வரும் வழக்கு குறித்த விவரங்களை இந்திய வெளிவிவகாரத்துறை உதவியுடன் தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மத்திய அரசு சார்பில் இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
 கேட்டுக்கொண்டுள்ளனர்.
சவுதியில் நடக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கி தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடுத் தொகையை சவுதி அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை
 விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 16 ஜனவரி, 2016

திருடிய பாடசாலை மாணவர்கள் மூவர் கைது!

வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் மூவரை, நேற்று முன்தினம் வல்வெட்டித்துறைப் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
கைதான மூவரில் இருவர், வல்வெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர், கம்பர்மலை பகுதியினை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் என பொலிஸார் 
கூறினர். 
கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து; 2½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 11 ஜனவரி, 2016

உங்கள் பல்வலி, பல்சொத்தை, பல்புழு நீங்க ???

மிகவும் திறமை வாய்ந்த சித்தமருத்துவர்.  ஒருவர் பல்வலி, பல்சொத்தை, பல்புழு போன்றவைகளிலிருந்து விடுபட ஒரு அருமையான மருத்துவத்தை தெளிவாக கூறியுள்ளார்.
ஒரு கைப்பிடியளவு தும்பை இலைகளுடன்,
நான்கு சின்ன வெங்காயங்களைச் சேர்த்து,
வாயில் போட்டு நன்றாக மென்று துப்ப
பல் சொத்தை, பல் புழு சரியாகும்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



வெள்ளி, 8 ஜனவரி, 2016

இயற்கை அனர்த்தங்கள்பற்றிய நாசா அவசர எச்சரிக்கை இலங்கைக்கு!!!

!இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.
எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 2 ஜனவரி, 2016

சர்­வ­தேச விமான நிலை­ய­மாக பலாலி விமான நிலை­யத்தை மாற்­ற அர­சு சம்­மதம்!

பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது
 எட்­டி­யுள்­ளது.
வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல்­வேறு தரப்­பி­னரும் சாத­க­மான கருத்­தி­லுள்­ளனர். ஆனால் அவ்­வாறு மாற்­று­வ­தற்கு மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வதை நாம் விரும்­பவில்லை.
இதனைத் தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டு ­வந்த நிலையில் தற்போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச தரத்தில் மாற்­று­வ­தற்கு விமான ஓடு பாதைகள் உட்­பட பல அபி­வி­ருத்­தி­களைச் செய்­வ­தற்கு நிலப்­ப­ரப்பு தேவை­யாக உள்­ளது.
இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­கரிக்கும் நட­வ­டிக்­கைகள் நடை­பெற்­ற­ போதும் நாம் பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதன் பய­னாக மக்­களின் காணி­களை சுவீ­கரிக்­காது கடற்­க­ரை­யோ­ரங்­களில் மண்ணை நிரப்பி அதற்கு ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்கள்
 முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
மேலும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது 
என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 31 டிசம்பர், 2015

மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா 
வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார். 
வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணசபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டில் இருந்து பனை, 
தென்னை மரங்களில்
 இருந்து வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதார நிதியாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். 
அத்தோடு, அண்மையில் 2016 ஆம் ஆண்டுக்கான தனது அமைச்சுக்கான நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இதனைத் தெரிவித்திருந்தார். 
இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆறு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 
வாழ்வாதார நிதி வழங்கும் நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாணசபை
 உறுப்பினர்கள், 
பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார் ஆகியோரும் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நான் முன்பே வாக்குக் கொடுத்திட்டேன்???

தாய்: ஏண்டி சேஷலூ குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே.
மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி.
தாய்: நீ என்னடி சொன்னாய்.
மகள்: நான் என்னம்மா சொல்லட்டும், ஆகட்டுமென்னுதான் சொல்லித் தொலைச்சேன்.
தாய்: அடிஅடி நாசமாப்போன முண்டே! துலுக்கனையா கட்டிக்கிரேண்ணு சொன்னே, நீ பேதியிலே போக, நீ பிளேக்கிலே போக, உனக்கு ஒரு உளமாந்தை வர.
மகள்: கோவிச்சுக்காதே அம்மா! அப்ப நான் ஆகட்டும் என்னு சொல்லியிருந்தேன் அல்லவா, அதை வச்சிண்டு வந்து கேட்டான். பின்னே நான் என்ன சொல்றது.
அப்ப நான் அப்படி சொல்லாதெ இருந்தா வீட்டை இடிச்சிருப்பானம்மா?
தாய்: உன் தலையிலே நெருப்பைக் கொட்ட, நான் 2, 3 வருஷத்திற்கு முன்னையே உன்னைக் கல்யாணம் பண்ணனும்
 என்னு உங்கப்பா
ஓடே சொன்னபோது, உங்கப்பா சாரதா சட்டமோ லக்ஷிமி சட்டமோ என்னமோ பேரெழவு சட்டம் குறுக்கிடறதடி என்று சொன்னார் அந்தப் பிராமணன். இப்போ நீ மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடற போதே அவனுக்கு வாக்குக்கொடுத்துட்டேன் என்கின்றாயே, இன்னம் கொஞ்ச நாள் போனா பறையனுக்கும் சக்கிலிக்கும் பால் குடிக்கிறபோதே வாக்குக்கொடுத்துட்டே னென்றல்லவாடி சொல்லுவாய். என் வயிறு பத்தி எறியரதேடி, நீ அந்த சுக்கூரோடு கொஞ்சினதைப் பார்த்து.
மகள்: இல்லே அம்மா உன்னெதிரிலே நான் கொஞ்சுவேனா அம்மா? 2, 3, வருஷத்திற்கு முன்னே கல்யாணம் ஆயிருந்தால் கூட அப்பவும் நான் வாக்குத் தவறமாட்டேனம்மா. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லேன். இப்ப அவன் வந்து நீ சொன்ன வார்த்தை என்னடி சேஷலூ குட்டி என்றானே, அப்பவும் இப்படித்தானே கேட்பான்.
தாய்: அடி சண்டாளி சொன்ன வார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது அவன் இனிமே இங்கே வந்தா உன் மயிரை அறுத்துடுவேன் தெரியுமா?
சின்னக் குழந்தையாய் இருக்கும்போது என்னமோ சொன்னாளாம் அவன் வந்து இப்போ கேக்கறானாம் என்னடி அனியாயம் இது?
மகள்: நீ மயிரை அறுக்கவாண்டாம் அம்மா சுக்கூரே என் மயிரைக் கத்தரிச்சூடறேன் என்று சொல்லி இருக்கான். யாரோ சரோஜனி குட்டிகளாம் அதுகள் மயிரைக் கத்திரிச்சிண்டிருக்காம். அதுமாதிரி என்னையும் கத்தரிச்சு விட்றேன்னு சொன்னான்.
தாய்: அய்யய்யோ கெட்டுப்போச்சடி காரியம். நம்ம குடும்பத்தையே ஜாதியையே பாழாக்கீட்டாயே நான் காவேரியில் போய் வீழ்ந்துடறேண்டி உன்னாலே.
மகள்: அம்மாம்மா, வேண்டாம்மா பின்னெ நான் என்னாம்மா சொல்லட்டும் சுக்கூருக்கு?
தாய்: என்னடி சொல்லறது. நான் அப்போ கொழந்தையா இருக்கச்சே வேடிக்கையா சொன்னா இப்ப என்னமாடா வந்து இத்தனை தைரியமாக் கேக்கறாய் என்று அதட்டிச் சொல்லடி
மகள்: இப்பவும் நான் கொழந்தை தாம்மா.
இப்ப யாரையாவது கட்டிண்டா கட்டின ஆம்படையானை இன்னும் 10 நாள் பொறுத்து நான் கொழந்தையா இருக்கும்போது கல்யாணம் செய்தூண்டேன் நீ வாண்டாம் போண்ணு சொன்னா போய்டுவானா? அப்படிதாம்மா சுக்கூரும் கேட்பான். ஒரு தடவை வாக்குத் தவறினால் என்ன? இரண்டு தடவை வாக்குத் தவறினால் என்ன? அப்புறம் தினம் தினம் வாக்குத் தவறினால் தான் என்னம்மா?
நான் சுக்கூர் கிட்ட சொல்லீட்டேன். கட்டினா அவனைக் கட்டிக்கிறேன். இல்லாவிட்டால் கன்னியா மடத்தில் சேர்ந்துக்கிறேன். எனக்குப் புருஷனே வாண்டாம், சுக்கூர் முகத்தில் மறுபடியும் நான் எப்படி 
விழிப்பேன்.
தாய்: உங்கப்பா வரட்டுமடி, நாளை காலையில் வரப்போரார். இதெல்லாம் அவரிடம் சொல்லி உன்னை இந்த வாரத்துக்குள்ளாகவே எவன் தலையிலாவது கட்டித்தொலைத்து விட்றேன்.
மகள்: அப்படியா என்னமோ செய்துக்கோ நான் என்னமோ சுக்கூருக்கு வார்த்தை கொடுத்திட்டேன்.
தாய்: உம், உம் கொடுப்பேடி ஆள் எளபபாளியாய் இருந்தால் (என்று சொல்லி விட்டு பேச்சை முடித்து விட்டாள்.(இரவு 1 மணிக்கு சுக்கூரும் சேஷலூக் குட்டியும் டப்பிள். தகப்பனார் வந்தார்.)
தாய்: ஏம் பேசலே கேட்டீளா சேஷலூ குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.
தகப்பன்: அவனோடு தான் போனாள் என்று உனக்கு எப்படிடீ தெரியும்.
தாய்: நேற்று அவனோடு சிரிச்சிண்டு பேசிகிண்டிருந்தா. நான் கண்டிச்சேன். அவள் ஒரு தைரியம் சின்ன கொழந்தையாய் மண்ணுக்
 கொளிச்சிண்டு 
விளையாடும்போது அவனைக் கட்டிக்கிறேண்ணு வாக்குக் கொடுத்துட்டாளாம். அதுக்காக அவனை கட்டிக்கணுமாம். அப்படின்னு என்னிடம் சொல்றா, வஸ்சேன் அப்பா வந்த சொல்ரேண்ணே. பயந்துண்டு ஓடிட்டா முண்டை.
தகப்பன்: சனியன் தொலைந்தது போ. அவன் மேலே அவளுக்கு ஆசை வந்துட்டுது என்னமோ சொல்லிண்டு ஓடிட்டா. நல்லகாரியம் இந்த நம்ம அயோக்கிய ஜாதியிலேயே அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை வேணுமுண்ணா 5000 ரூ வரதக்ஷணை கல்யாணச் செலவு 2000 ரூ ஆக 7000 ரூபாயிக்கு எங்கே போரது யாரை விக்கிறது.
போகட்டும் போ அவனும் SSLC. பாசுபண்ணி இருக்கான். நல்ல அசல் சாயபு. பிராமணனாட்டமா செக்கச்செவேரெண்ணு இருக்கான். பிராமணன் M.A. படிக்கிறதும் சரி சாயபு SSLC படிக்கிறதும் சரி, சீக்கிரத்திலெ ஏதோ வேலைக்கு வந்துடுவன், நம்மை விட்டது சனியன்.
தாய்: ஐயய்யோ அசட்டு பிராமணா அப்படிதான் இருந்தாலும் ஒரு முதலி நாயக்கன் இல்லையா சாயப்போடவா ஓடரது.
தகப்பன்: என்னமோ அவ கண்ணுக்கு பிடிச்சவனோடு போய்ட்டா. நம்ம ஜாதியில் இல்லாவிட்டால் வேறு யாரோடு போனால்தான் என்ன? முதலிக்கும் சாயபுக்கும் என்னடி வித்தியாசம் மொட்டை ஒன்றுதானே, உனக்கு என்னத்துக்கடி இத்தனை ஆத்திரம்
தாய்: சுக்கூர் அவாத்திலே பொண்ணை மூடி போட்டல்லவா வெச்சூடுவா. இனி அவளைப் பார்க்க முடியும்
தகப்பன்: நீ வேணுமன்னா அவாத்துக்கு போய் தினம் பாத்துட்டு வாடி யாரு வாண்டாமென்றா.
தாய்: சரி சரி அவாத்துக்கு போனா நாலுபேரு என்ன சொல்லுவா.
தகப்பன்: என்னமோ சொல்லுவா நான் சம்மதிச்சா அப்பரம் யார்டீ கேக்ரெவா இனி அப்படித்தாண்டி எல்லாம். ராஜகோபாலாச்சாரியார் சேட்டுக்கு பெண் கொடுக்கலையா?
சூரியராவ் நாயுடு ஒரு சாயபுக்கு பெண் கொடுக்கலையா? நீலகண்ட சாஸ்திரி வெள்ளைக்காரனுக்கு பெண் கொடுக்கலையா? சடோபாத்தியாயா நாயுடுக்கு பெண் கொடுக்கவில்லையா? நாம்தானா கெட்டுப்போயிட்டோம். அதுவும் நாமா கல்யாணம் செய்து கொடுத்தமா அவளே ஓடிட்டா.

நமக்கு என்னடி பயம் ரூ 7000 மிச்ச மாச்சடி சுக்கூர் அவப்பா சிபார்சிலே நம்ம மணிக்கி கூட ஒரு உத்தியோகம் வந்துடும். நீ ஒண்ணும் சத்தம் போடாதே. யாராவது கேட்டால் காங்கிரஸ்காரர் கேட்டா இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லடி. ஜஸ்டிஸ்காரர் கேட்டா சுயமரியாதையில் சேர்ந்துட்டோம் என்று சொல்லடி, அப்பரம் யார் நம்மண்டை வருவா 
பார்ப்போம்.
தாய்: சரி பகவானே காலம் இப்படியா கெட்டுப்போகணும்?
தகப்பன்: என்னடி கெட்டுப்போச்சி? நாளவருஷத்துக்குப் பார்டீ சேஷலூகுட்டி தங்க விக்கிரகமாட்டமா பிள்ளை பெத்துடப்போரா எங்கயோ அவா சௌக்கியமாய் இருந்தால் சரி, போய் வேலையைப் பார்.
 சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதியது --- “பகுத்தறிவு” - ஜனவரி 1936
Labels: பெரியார்
29.12.10
பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?
பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.
திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை 
ஒழிக்கப்பாடுபடுகிறேன்.
31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு. “விடுதலை” 11.09.1959
Labels: பெரியார்
முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா?
யாகம் என்னும் கலாச்சாரம்!
யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம்.
ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகள் தோன்றினார்கள். சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது.
வடபுலம் என்று வீரப் பராக்கிரமம் காட்டி கனக விசயன் தலையில் கல்லேற்றி வந்த வீராதி வீரன் செங்குட்டுவன் மாடல மறையோன் என்னும் பார்ப்பன நஞ்சு, ஊட்டிய மதப் போதையில் சிக்கி யாகம் நடத்தி, மானம் 
கெட்டான்.
பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார்.
ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.
தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், காட்டு விலங்காண்டித்தனமானது. வெட்டுண்ட குதிரைகளுடன் தசரதனின் பட்டத்தரசிகள் கட்டிப் புரண்டனர் என்பது என்னே கண்ணராவி!
யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் 
உச்சகட்டம்.
ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும்.
குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.
அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நரமேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.
இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம்.
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.
வேத வேள்வியை நிந்தனை செய் துழல்
ஆத மில்லிய மனோடு தேரரை
வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே
வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தன்.
யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்
இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா?
இதோ ஒரு செய்தி:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம்.
இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்துகொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).
150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம்.
எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்?
உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா?
வேதப் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள்.
சிந்திக்கும் திறனிருந்தால் 
சிந்தியுங்கள்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 19 டிசம்பர், 2015

இலவச தொலைபேசிகள் ஊடகவியலாளர்களுக்கு?

நாட்டிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் தொலைபேசிகளை வழங்கும் திட்டம் ஒன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
 தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அடுத்த வருடம் முதல் இலவச ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் மானிய விலையில் இணைய தரவு பக்கேஜ் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகளுக்கு மானிய தொலைபேசி இணைப்பு வழங்கப்படவுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து TAB உபகரணமும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 16 டிசம்பர், 2015

கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்

கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற ரயில் - கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்.
ரயில் கடவையைக் கடக்க முயன்ற கார் ஒன்று ரயிலுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பங்கதெனியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயிலுடன் பட்டுகமையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் கப்புவத்தை புகையிரத கடவைக்கு அருகில் வைத்து மோதியதால் காரில்
 பயணித்த இருவர்
 பலியாகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மினுவாங்கொடையைச் சேர்ந்த நிமல் ராஜபக்ஷ பண்டார (வயது 42) என்ற கார் சாரதியும் ஜா - எலையைச் சேர்ந்த பெட்றிக் அருணோத் கனகப்பெருமாள் (வயது 24) என்ற இளைஞரும் பலியாகியுள்ளனர் என்று கந்னைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இதோ டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவில் உலகிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலானது சளி, இருமல், என சாதாரண அறிகுறிகளாக ஆரம்பித்து இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் 
கொண்டதாகும்.
‘ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்து மெக்ஸிகோ நாட்டின் ஒப்புதலையும் 
பெற்றுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 10 டிசம்பர், 2015

மணப்பெண்ணிற்கு வழக்கமாகஅம்மாஅறிவுரை கூறுவார் மாறாக தந்தை???

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :
வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
தானே அறிவுரை கூறுவார்கள், பின்
ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா?
செல்லமே!
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடம் , என்
அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்
மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்
எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை
.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா....
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என்
வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.
அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள்
இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் ","
எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம்
போட்டு உட்கார வைக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்....
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்....!
அன்புடன் அப்பா.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிறுபோகத்தை நிறுத்துவதால் ,2,500 மில்லியன் நட்டம்!!!

அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
இரணைமடு குளத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்வதற்காகவே, அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்தவேண்டியுள்ளது. அத்தோடு பயிர்ச்செய்கை நிறுத்தப்படுகின்ற போது, பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவேண்டும்‘ என்று அவர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளைத் தமது திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாக பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுதாகரன் மேலும் தெரிவித்தார்.-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 7 டிசம்பர், 2015

பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று வருட கால வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.
தேயிலை வர்த்தக அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பன இதற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்த மொத்த தேயிலை உற்பத்தி, 26.7 மில்லியன் கிலோவாக பதிவாகி
 இருந்தது.
ஜனவரியில் இருந்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 279.8 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்ததுடன், இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 1.4 சதவீத வீழ்ச்சியாகும்.
குறிப்பாக கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 டிசம்பர், 2015

இருவர்.குளாய் கிணற்றுக்குள் மூச்சுத் திணறிபலி!!!

யாழ் உடுப்பிட்டி பகுதியில் குளாய் கிணற்றுக்குள் ஏற்பட்ட பழுது பார்ப்பதற்கு இறங்கிய 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.
புலோலி பகுதியினைச் சேர்ந்த மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையினைச் சேர்ந்த கிருஸ்னமூர்த்தி (வயது 61) ஆகிய இருவருமே
 இச் சம்பவத்தில்
 உயிரிளந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படிப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளாய் கிணற்று மோட்டர் பழுது பட்டுள்ளது. இதனை
 திருத்துவதற்கு
 பாரிய பள்ளத்திற்குள் இறங்கி ஒருவர் முயசித்துள்ளார்.
திருத்த வேலைக்காக பள்ளத்திற்குள் இறங்கியவரை நீண்ட நேரமாக காணவில்லை என்ற காரணத்தினால் அவருடன் வந்த மற்றைய நபரும் அந்த பள்ளத்திற்குள் இறங்கியுள்ளார். ஆனால் இருவருமே வெளியில் 
வரவில்லை.
 பள்ளத்திற்குள் சடலமாகவே இனங்காணப்பட்டுள்ளார். இருவரும் பள்ளத்திற்குள் மூச்சு திணறி உயிரிளந்திருக்கலாம்
 என்று நம்பப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>