siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 5 அக்டோபர், 2026

பெண்ணை கொலை செய்த இளைஞன் யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிர் மாய்ப்பு

பெண்ணை கொலை செய்த இளைஞன் யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிர் மாய்ப்பு
 இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின்  அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய  இளைஞன் யாழில்  புகையிரதம் முன்பாக பாய்ந்து
 உயிரை மாய்த்துள்ளார்.
கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே
 உயிரிழந்துள்ளார் 
அதேவேளை குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் , தாயார் படுகாயமடைந்த நிலையில்  , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து 
தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான் 
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


ஞாயிறு, 4 அக்டோபர், 2026

யாழில் ரயில் பாதையில் படுத்திருந்து பாட்டுக் கேட்டவரின் கால்கள்,கை துண்டிப்பு

யாழில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். குறித்த சம்பவமானது
 நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருநந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை தொடருந்து
 மோதியுள்ளது.
அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html   


சனி, 3 அக்டோபர், 2026

மரண அறிவித்தல், பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் காலமானார்

 

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (57) அவுஸ்திரேலியாவில் காலமானார்.
இளம் வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து பௌத்த மதத்தைத் தழுவிய மாணிக்கம் நெடுமாறன், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் பௌத்த துறவியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மெல்பேர்ணில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை
 பெற்று வந்தார். 
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக உலகத் தமிழர் பேரமைப்பு 
தெரிவித்துள்ளது. 
மாணிக்கம் நெடுமாறனின் இறுதிச்சடங்குகள் பௌத்த மத வழக்கப்படி மெல்பேர்ணிலேயே நடைபெறவுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பழ.நெடுமாறனும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்திருந்ததாகவும், எனினும் பழ.நெடுமாறனின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதால் இருவராலும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
மகனின் இறுதிச்சடங்கில் கூட நேரில் பங்கேற்க முடியாத நிலை குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மாணிக்கம் நெடுமாறனின் மறைவு செய்தியைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். 
மது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_29.html


வெள்ளி, 2 அக்டோபர், 2026

நாட்டில் வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்

.நாட்டில் வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.வியாழக்கிழமை மாலை குறித்த இளைஞர் மைதானத்தில் நின்ற நிலையில் மழை பெய்துள்ளது. இதனையடுத்து அவர் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்றுள்ளார். இதன்போது அவர் மீது மின்னல் தாக்கியுள்ளது 
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா செக்கடிப்பிலவு பகுதியை சேர்ந்த 20 வயதான ஜோசப் அன்ரணி என்ற இளைஞரே பரிதாபமாக 
உயிரிழந்துள்ளார்.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பொழிந்திருந்தது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


வியாழன், 1 அக்டோபர், 2026

நாட்டில் பொலன்னறுவையில் இரு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

 நாட்டில் பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் மனைவியின் கூற்றுப்படி, நேற்று புதன்கிழமை (30) தனது கணவர் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் வீட்டிற்கு அருகில் வந்து, தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ள நிலையில், இரவு வீட்டிற்கு திரும்பவில்லை எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மனைவி 
தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் மது அருந்தியபோது இடம்பெற்ற கொலையா அல்லது பிரதான வீதியில் விழுந்து கிடந்த போது ஏதேனும் வாகன விபத்தில் சிக்கியதன் காரணமாக ஏற்பட்டதா என்பது தொடர்பில்
 பொலன்னறுவை காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பொலன்னறுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் முல்லைத்தீவில் காட்டு யானைகள் அட்டகாசம்

 நாட்டில் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்பகுதி மக்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரது முறைப்பாட்டிற்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேற்று புதன்கிழமை (30) நேரில் சென்று காட்டுயானைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களைப் பார்வையிட்டார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக ஏற்கனவே கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை  (20) இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பிலக்குடியிருப்பில் மக்கள் காட்டுயானைகளால் பாதிப்புக்குள்ளாகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைக்குமாறு குறித்த கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டுமிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து 2027ஆம் ஆண்டிற்கான நிதி
 ஒதுக்கீட்டில் பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அதன் பின்னரும் பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்கை
 பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மையில் பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானையால் வீடொன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பயிர்நிலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில் நிலமைகளை நேரில் பார்வையிட்டுநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிலக்குடியிருப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்க்க தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 30 செப்டம்பர், 2026

நாட்டில் கனகாம்பிகைகுளத்தில் டிப்பர் மோதி இளைஞனின் கை துண்டிப்பு

நாட்டில் .கிளிநொச்சி, கனகாம்பிகைகுளம் சேவிஸ் வீதி சந்தியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் ஒன்று, வேறொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் டிப்பர் வாகனம் இழுத்துச் சென்றுள்ளது. இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி - பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞனின் கை, முழங்கைக்குக் கீழ் துண்டாடப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மரண அறிவித்தல் அமரர் முருகையா இராசேந்திரம்( வவி )

​துயர்  பகிர்வு-மலர்வு:-00. -உதிர்வு: 29-09-2026
யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியை பிறப்பிடமாகவும். கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட. 
அமரர்  முருகையா இராசேந்திரம்( வவி ) 
அவர்கள் இன்று 29/09/26 செவ்வாய் இறைபதம் அடைந்தார். . 
அன்னார். காலஞ்சென்ற முருகையா மற்றும்பூமணி தம்பதியின் அன்பு  மூத்தமகனும்
காலஞ்சென்ற இராதுரை புவனேஸ்வரி தம்பதியின் அன்பு மருமகனும். 
குமுதாவின் அன்பு  கணவரும்
ரோஷிகா, யதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் 
ரஞ்சி( கனடா) காலஞ்சென்ற வவா மற்றும் தயா,( டென்மார்க்)நந்தன் ( சுவிஸ்) உஷா( இலங்கை)ஆகியோரின் அன்புச் சகோதரனும்
குணசேகரம்(குட்டி) , காலஞ்சென்றவர்களான ராசன் குவி, சிவா மற்றும் ஜெயம்( அவுஸ்திரேலியா),உதயன், சுரேஸ், பரணி ஆகியோரின் 
அன்பு மைத்துனரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். 
மது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தொடர்புகடளுக்கு. 
குமுதா - மனைவி+1 (416) 887-4066
ரஞ்சி- சகோதரி (416)4972971
குட்டி- மைத்துனர் (647)989-2671
தயாளன் இராசையா- மைத்துனர்-(416) 825-9373

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_28.html


செவ்வாய், 29 செப்டம்பர், 2026

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

 மோட்டார் சைக்கிள் விபத்த்தில் யாழ் தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 
பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னரை சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே 
உயிரிழந்துள்ளார் 
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பயணித்த போது, தனங்கிளப்பு பகுதியில் , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
 உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 28 செப்டம்பர், 2026

யாழ் வல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் உயிரிழப்பு

யாழ் வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர் , வல்லை முனீஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வீதிக்கு ஏறிய இளைஞனுடன் மோதுண்டு , வீதியில் விழுந்த வேளை , பின்னால் வந்த வாகனம் பூசகரை மோதியதில் , அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , நெல்லியடி பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
 என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navakkiri.blogspot.com/2026/09/250926.html


மரண அறிவித்தல் .அமரர் திரு. சண்முகம் சிவலிங்கம்

​துயர்  பகிர்வு-மலர்வு:- 02.05.1965 -உதிர்வு: 23-09-2026
​யாழ் கரவெட்டி, துன்னாலையைப் பிறப்பிடமாகவும் தற்போது , பிரான்ஸ் (Trancy) நாட்டில் வசித்து வந்த திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள்  23-09-2026-அன்று இயற்கை எய்தினார் 
​அன்னார், காலஞ்சென்ற திரு. மற்றும் திருமதி சண்முகம் - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வரும்,
மகேஸ்வரி (லீலா, கனடா), காலஞ்சென்ற சந்திரலிங்கம், அரசலிங்கம் (அரசன், பிரான்ஸ்), மற்றும் ராஜேஸ்வரி (கலா, நார்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.  
​மேலும், லீலா அவர்களின் சகோதரரான அன்னார், கனடா துன்னாலை கரவாய் மக்கள் சங்கத்தின் உறுப்பினரான S. T. நாதன் அவர்களின் 
மைத்துனரும் .ஆவர்  
.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
மது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
​தொடர்புக்கு:
​லீலா (மகேஸ்வரி) , ST 647 740 7629: 

https://navakkiri.blogspot.com/2026/09/250926.htm


ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

இடம்பெற்ற விபத்தொன்றில் லண்டனில் இலங்கை மாணவி பலி

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
.தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர், கடந்த 24-09-2026-வியாழக்கிழமை  அன்று  காலை 8.15 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பயணித்த காரொன்று மெலீஷா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் 
                                                                       தெரிவிக்கின்றன.                                                   
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 68 வயதுடைய காரின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 26 செப்டம்பர், 2026

கட்டிடம் வெடித்து இடிந்து விழுந்ததில் ஏதென்ஸில் ஆறு பேர் உயிரிழப்பு

கட்டிடம் வெடித்து கிறீஸ் தலைநகர் ஏதென்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாக்கா பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டு, மூன்று மாடிக் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், நான்கு அமெரிக்க சுற்றுலாப் பயணிகள், ஒரு பிரிட்டன் நாட்டவர் மற்றும் ஒரு கிரேக்க நாட்டவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டவர் அதே கட்டிடத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளில் ஒருவராவார்.
வெடிவிபத்தில் அருகிலிருந்த கட்டிடங்களும் சேதமடைந்தன
. கட்டிடத்தின் இடிபாடுகள் சாலையில் சிதறிக் கிடந்தன. 
அருகிலிருந்த சில கட்டிடங்களில் வசித்தவர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணியாளர்கள் அகழ்வு இயந்திரங்கள் மற்றும் வெப்பப் படமெடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை பிற்பகுதிக்குள் ஆறு பேரின் உடல்களும் 
மீட்கப்பட்டன.
இந்த வெடிவிபத்துக்கு எரிவாயுக் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்ரோபோலிஸ் மற்றும் ஒலிம்பியன் ஜீயஸ் கோயில் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலேயே இந்தச் சம்பவம்
 இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் வெளியுறவு அலுவலகமும் சம்பவம் குறித்து அறிந்துள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 25 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர். பொன்னம்பலம் தங்கராசா 25.09.26

துயர்  பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு: 25-09-2026
மலேசியா செரம்பானைப் பிறப்பிடமாகவும். யாழ்,அச்சுவேலி தெற்க்கு, சிவன் வீதி ஆவரங்கால் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்.  பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 25-09-2026- இன்று காலை இறைபதம் அடைந்தார். 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னார் ,காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும், 
காலஞ்சென்ற கந்தசாமி, நல்லபிள்ளையின் அன்பு மருமகனும். 
இரத்தினத்தின் அன்புக் கணவரும்.
தயானந்தன் (UK), ஜெயந்தினி (Germany), ஜெயந்தன் (Engineer  Singapore) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் 
ராதிகா (UK), விஜயசிறீலன் (Germany), வசுமதி (Singapore) ஆகியோரின்  அன்பு மாமனாரும். 
ஹரிணி, கிருஷ்ணி, கர்சனா, வர்ஷனன், வர்ஷிகா, சாதுர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றியவிபரம் பின்னர் இந்த இணையத்தில் இணைக்கப்படும்   
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
மது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தொடர்புகட்க்கு. 
தயா( மகன்) 
00447897 387778
ஜெயந்தன்( மகன்)
00 65 9003 0412

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_23.html





 

நாட்டில் பூநகரியில் நாவல்பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்

நாட்டில் கிளிநொச்சி குடமுருட்டி பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (பிற்பகல் 3 மணியளவில் பரநதன் பூநகரி பிரதான வீதியில்
 இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் நாவல்பழ வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலியாகிய சிறுவன் கிளிநொச்சி உருத்திரபுரம் - எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்சன் என்ற சிறுவனே விபத்தில்
பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 24 செப்டம்பர், 2026

நாட்டில் பனிக்கன்குளம் பகுதியில் வீடொன்றில் தம்பதி அடித்துக்கொலை

நாட்டில் முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் 
இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை 
செய்யப்பட்டுள்ளனர் 
பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தை, 
தாய் மற்றும் அவர்களின் மகள் ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில்.24-09-2026-, இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டுக்குள்
 நுழைந்துள்ளனர்.
இதன்போது, தந்தை மற்றும் தாயின் தலையில் குறித்த நபர்கள் கோடரியால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த மகள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 23 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரட்ணம் விசயஜரட்ணம்

துயர் பகிர்வு-மலர்வு: 00-உதிர்வு: 23-09-2026க
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் இராசரட்ணம் விசயஜரட்ணம் அவர்கள், 23.09.2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்  தம்பதியினரின்  அன்பு மகனும் 
 காலம்சென்ற  ரத்தினம்  தம்பதியினரின் அன்பு மருமகனும் 
ஈசு ( தோப்பு  அச்சுவேலி (கைத்தொழில் பேட்டை வீ தி ) அவர்களின் அன்புக் கனவரும் ஆவார் 
 அன்னாரின் இறுதி கிரியை 24-09-2026அன்று  அவரது
இல்லத்தில் மு.ப 8:30 மணியளவில் நடைபெறும்
அன்னாரின்  நல்லடக்கம்
24-09-2026.  வியாழக்கிழமை  அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(நிலாவரை)
நவற்கிரி .புத்தூர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_23.html

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

கோர விபத்து யாழ். செம்மணியில் மூவர் வைத்தியசாலையில்

இன்று யாழ்  செம்மணிப் பகுதியில் டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று 22.9.2026-காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
பத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

மரண அறிவித்தல் அமரர் மோகநாதன் நிஷாங்கன் (சங்கர் )

இலங்கை  மல்லாவியை பிறப்பிடமாகவும்  தற்போது  இந்தியா  சென்னையில் வசித்துவந்தவருமான அமரர் மோகநாதன் நிஷாங்கன் (சங்கர் )
அவர்கள் 21-09-2026-திங்கள் கிழமை அன்று சென்னையில்
 இறைபதம் எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html

திங்கள், 21 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் நீரில் மூழ்கி உயிரிழந்த அமரர்கள் நால்வர்

நாட்டில் கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய – படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஹமங்கட பகுதியில், மா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில்,
🕊️ செல்வகுமார் தினேஷ்குமார் (25) – ஹப்புத்தளை, ஓஹிய
🕊️ சுப்பிரமணியம் திருச் செவ்வி (28) – பெரியகுளம்
🕊️ சந்திரசேகரன் சுதர்சனி (20) – தெமோதரை, உடுவரை தோட்டம் மேற்பிரிவு
🕊️ நாகராஜா நிசாந்தனி (19) – தெமோதரை, உடுவரை தோட்டம் மேற்பிரிவு
ஆகிய நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இளம் வயதிலேயே நான்கு உயிர்கள் பறிபோயிருப்பது அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகுந்த வேதனையையும் பேரிழப்பையும் 
ஏற்படுத்தியுள்ளது.
💔 ஒரே நேரத்தில் நான்கு உயிர்களை இழந்துள்ள குடும்பங்களின் துயரத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோர், சகோதர சகோதரிகள், வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களை நேசித்த அனைவருக்கும் 
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html