siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

 மோட்டார் சைக்கிள் விபத்த்தில் யாழ் தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 
பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னரை சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே 
உயிரிழந்துள்ளார் 
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பயணித்த போது, தனங்கிளப்பு பகுதியில் , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
 உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக