siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

இடம்பெற்ற விபத்தொன்றில் லண்டனில் இலங்கை மாணவி பலி

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
.தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர், கடந்த 24-09-2026-வியாழக்கிழமை  அன்று  காலை 8.15 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பயணித்த காரொன்று மெலீஷா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் 
                                                                       தெரிவிக்கின்றன.                                                   
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 68 வயதுடைய காரின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக