siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 21 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் நீரில் மூழ்கி உயிரிழந்த அமரர்கள் நால்வர்

நாட்டில் கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய – படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஹமங்கட பகுதியில், மா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில்,
🕊️ செல்வகுமார் தினேஷ்குமார் (25) – ஹப்புத்தளை, ஓஹிய
🕊️ சுப்பிரமணியம் திருச் செவ்வி (28) – பெரியகுளம்
🕊️ சந்திரசேகரன் சுதர்சனி (20) – தெமோதரை, உடுவரை தோட்டம் மேற்பிரிவு
🕊️ நாகராஜா நிசாந்தனி (19) – தெமோதரை, உடுவரை தோட்டம் மேற்பிரிவு
ஆகிய நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இளம் வயதிலேயே நான்கு உயிர்கள் பறிபோயிருப்பது அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகுந்த வேதனையையும் பேரிழப்பையும் 
ஏற்படுத்தியுள்ளது.
💔 ஒரே நேரத்தில் நான்கு உயிர்களை இழந்துள்ள குடும்பங்களின் துயரத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோர், சகோதர சகோதரிகள், வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களை நேசித்த அனைவருக்கும் 
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/140926.html





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக