siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 செப்டம்பர், 2026

நாட்டில் கனகாம்பிகைகுளத்தில் டிப்பர் மோதி இளைஞனின் கை துண்டிப்பு

நாட்டில் .கிளிநொச்சி, கனகாம்பிகைகுளம் சேவிஸ் வீதி சந்தியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் ஒன்று, வேறொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் டிப்பர் வாகனம் இழுத்துச் சென்றுள்ளது. இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி - பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞனின் கை, முழங்கைக்குக் கீழ் துண்டாடப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக