siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 24 செப்டம்பர், 2026

நாட்டில் பனிக்கன்குளம் பகுதியில் வீடொன்றில் தம்பதி அடித்துக்கொலை

நாட்டில் முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் 
இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை 
செய்யப்பட்டுள்ளனர் 
பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தை, 
தாய் மற்றும் அவர்களின் மகள் ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில்.24-09-2026-, இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டுக்குள்
 நுழைந்துள்ளனர்.
இதன்போது, தந்தை மற்றும் தாயின் தலையில் குறித்த நபர்கள் கோடரியால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த மகள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக